எண்ணங்களை அழகுபடக் கூறும் காதல் கவிதைகளின் தொகுப்பு நுால்.
முதல் கவிதை, ‘தோல் சுருங்கிப் போகையிலும் துள்ளும் இளமை காதல் தான்... மரை கழண்டு போனாலும் மனதில் வாழுமே காதல் தான்’ என்ற வரிகள் ரசிக்கும் வகையில் உள்ளது. தலைப்புகள் சினிமா படங்களை ஞாபகப்படுத்துகின்றன. ‘ஏ டூ இசட்’ தலைப்பிலான கவிதைகளில் ஒன்று, ‘அழுக்கு நீரில் பார்த்தாலும் அழகாக முகம் தோன்றும்... கட்டெறும்பு கடித்தாலும் கைகட்டி வாய் சிரிக்கும்’ என்ற வரிகள் புதுவிதம்.
காதலனை சாய்க்க எடுக்கும் ஆயுதமாக, ‘மவுனம்’ இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளது. பிரிவு பற்றிய கவிதையில், ‘தாய் தந்த உணவும் பகையாகத் தோணுதே... நலம் ஏதும் கேட்காமல் பூங்காத்தும் விலகுதே’ என கூறப்பட்டுள்ளது. ரசிக்கும் கவிதை நுால்.
– முகில்குமரன்