நெல் தானியத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் நுால். பல சூழல்களிலும் வளர்ந்து, பலன் தருவது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தில், 11 கட்டுரைகள் உள்ளன. முதலில், பல்வேறு நெல் ரகங்கள் அவற்றின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது. இயற்கை வேளாண் முறையில் பயிரிடுவதால் கிடைக்கும் பயன்களை காட்டுகிறது.
நெல்லில் பாரம்பரிய ரகங்களை பரப்புவதற்கு தமிழகத்தில் நடக்கும் விதைத் திருவிழாவின் சிறப்பு அம்சங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. மரபணு மாற்றப்பட்ட விதை பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள், மருத்துவ குணமுள்ள நெல் ரகத்தில் பூச்சிக்கொல்லி பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றியும் விளக்குகிறது. பாரம்பரிய நெல் தானியங்களை அறிமுகம் செய்யும் நுால்.
– ஒளி