வர்மக்கலை ஒரு மர்மக்கலை என விளக்கும் நுால். எங்கே அடித்தால் எங்கே வலிக்கும், எங்கே இறக்கினால் அந்த வலி நீங்கும் என விவரிக்கிறது.
உடலில் நாடி பார்க்கும் முறையும், அதன் வழியாக நோய் அறியும் விதமும் விவரிக்கப்பட்டுள்ளது. மூலிகைகளின் சாரம் உணர்ந்து மருந்துகள் தயாரிக்கப்படுவதை எடுத்துக்காட்டுகிறது. ஒருவரை தொடாமலே வீழ்த்துவது பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.
உடலில் எங்கெங்கு எந்த வர்மங்கள் உள்ளன என்பதை வரைபடங்களில் தெளிவுபடுத்துகிறது. வல்லாரை, இஞ்சி, சுக்கு, ஏலம், சாதிக்காய், சீரகம், நிலவேம்பு, வால்மிளகு பயன்களை தெளிவாக உணர வைக்கிறது. வாழ்வில் அவ்வப்போது எடுத்து படிக்க வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச்சாத்தன்