அறிவுக்கு எட்டாத அமானுஷ்ய செயல்களை பற்றி கூறும் நுால்.
காது இல்லாமல் கேட்பதும், கண் இல்லாமல் காண்பதும் அதீத புலன் ஆற்றல். கூடுதல் புலனறிவால் நடக்கப்போவதைக் கூறும் டெலிபதி ஆற்றல் சிலருக்கு உண்டு. இத்தகு அற்புத அனுபவங்களை ஆதாரத்துடன் தருகிறது.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூரி கெல்லெர், பார்வையால் ஸ்பூனை வளைப்பார். வரப்போகும் பேருந்து எண்ணை முன்கூட்டியே சொல்பவரும் உண்டு. அலுவலகத்தில் இருந்தபடியே, நடுக்கடலில் கப்பலில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் வழிகளை தொலைபேசியில் கூறிய மெக்கானிக் குறித்து தெரிவிக்கிறது. ஐம்புலன்களுக்கும் அப்பால் உள்ள சக்தியை பெற ஆழ்நிலைத் தியானம் உதவும் என்று உரைக்கும் நுால்.
– -முனைவர் மா.கி.ரமணன்