பெனசீர் பூட்டோ வாழ்க்கை வரலாற்றை கூறும் நுால். வனதேவதையாக மக்கள் கொண்டாடியதை கூறுகிறது.
செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தும் கர்வம் இன்றி தனித்துவமாக செயல்பட்டதை விளக்குகிறது. சர்வாதிகாரியாக இருந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த, பெனசீரின் தந்தை பூட்டோ துாக்கிலிடப்பட்டதை விவரிக்கிறது.
கர்ப்பிணி கோலத்திலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட துணிவை கூறுகிறது. ஆட்சியில், தீவிரவாத குழுக்களால் ஏற்பட்ட தலைவலியை எடுத்துரைக்கிறது. ஊழல், சட்டமீறல் குற்றச்சாட்டில் சிறை சென்று செல்வாக்கை இழந்ததையும் கூறுகிறது. கொலை முயற்சியில் தப்பியதை சொல்கிறது. கொலைக்கு பெண்ணை தலைமை பொறுப்பில் ஏற்க மறுத்ததே காரணம் என விளக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்