நேரத்தை நிர்வகிக்க கற்றுத் தரும் நுால். காலத்தின் அருமையை புரிய வைக்கிறது. இனி உங்களுக்கு, ஒரு நாளைக்கு, 72 மணி நேரம் என்ற முத்தாய்ப்புடன் மலர்ந்துள்ளது.
படிக்கவும், பணிகளை செய்யவும் நேரம் இல்லை என புலம்புவோருக்கு தக்க பாடம் கற்றுத் தருகிறது. அன்றாடம் நேரத்தை எப்படி எல்லாம் உபயோகப்படுத்தலாம் என்பதை தக்க வழிமுறையுடன் விளக்கி சொல்கிறது.
என்ன செய்தால் நேரம் வசப்படும் என்பதை எளிய உதாரணங்கள் வழியாக விளக்குகிறது. கவரும் தலைப்புகளில் துணுக்குகள் போல் உள்ளது.
சுலபமாக தொடர்பு கொள்வது, ஓய்வுக்கான வழிமுறை, நேரத்தை உபயோகமாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் வித்தையை கற்பிக்கிறது. அன்றாடம் கடைப்பிடிக்கும் வழிகளை சொல்லும் நுால்.
– மதி