பெண்களுக்கு உரிய சிறப்பு, நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் நுால். சுதந்திரத்தை பேணிக் காப்பதையும் தெரிவிக்கிறது. பெண்களை உயர்வாக மதித்து மென்மையாக குறிப்பிடுகிறது. மதம் என்பது நம்பிக்கை; அது வெறியாக மாறினால் வன்முறை துாண்டப்படும் என்பதை எடுத்துக் கூறுகிறது.
ஒவ்வொருவரின் வாழ்விலும் மிக முக்கிய இடத்தைப் பெறுவது நட்பு. பள்ளி, கல்லுாரி பருவம், பணியிடங்களில் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள, அரவணைப்புக்கு உதவும் சிறந்த நட்புக்கும் எல்லை வரையறை செய்துள்ளது. நல்ல பழக்க வழக்கங்கள் உள்ளோரிடம் நட்பு வைத்துக் கொள்ள அறிவுரைக்கும் நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்