உடற்பயிற்சியால் தன்னம்பிக்கையை வளர்த்து வாழ்வில் வெற்றி பெறலாம் என விளக்கும் ஆங்கில நுால். தடையை பொருட்படுத்தாமல் வெற்றி இலக்கை தொடும் வழியை வகுத்து தருகிறது.
விபத்தால் காலில் எலும்பு முறிவுக்குப் பின், சிகிச்சை பெற்று, நீண்ட ஓட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றது குறித்து குறிப்பிடுகிறது. இது போன்ற செயல்களால் உலக சாதனை செய்ய முடிந்ததை விவரிக்கிறது. உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் ஆலோசனைகளை தருகிறது.
விளையாட்டு, உடற்பயிற்சி, முன்னேற்றத்துக்கு முக்கியம் என்கிறது. வெளிநாட்டு மாரத்தான் பந்தயங்களில் பங்கு பெற்றது பற்றியும் குறிப்பிடுகிறது. உடற் பயிற்சியின் மேன்மையை விளக்கி நம்பிக்கையூட்டும் நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்