கிறிஸ்தவ மத புனிதரான தோமையர் பற்றி ஆய்வு செய்து கருத்துகளை தொகுத்து தரும் நுால். தமிழகத்தில் தங்கி சீர்திருத்தங்கள் செய்ததாக கூறுகிறது.
எட்டு தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. கிறிஸ்துவ புனித நுாலான விவிலியத்தில், தோமையர் பற்றிய விபரங்களை சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் சீடர் என உறுதி செய்கிறது. இந்திய வரவு பற்றிய விபரங்களும் உள்ளன.
கேரளா, மலபார் கடற்கரை, கிரேங்கனுார் துறைமுகம் வழியாக வந்ததாக பதிவு செய்கிறது. இங்கு ஆற்றிய ஆன்மிக பணிகள் பற்றியும் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சென்னை நகரில் மயிலாப்பூர், சின்னமலை, பரங்கிமலை பகுதி குகைகளில் தங்கி, தோமையர் மக்களுக்கு உரிய சேவையாற்றியதாக குறிப்புகளை தரும் நுால்.
– ஒளி