இத்தாலிய மொழியில் பழங்காலத்தில் எழுதப்பட்ட புத்தகத்தின் மொழிபெயர்ப்பு நுால்; மறு பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
இத்தாலியில், ‘இல் பிரின்ஸிப்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டது. அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மனிதன் மற்றும் மதம் பற்றி அந்த காலத்தில் இருந்த எண்ணங்கள், 25 பிரிவுகளில் உள்ளன. சிறிய கட்டுரைகள் போல் தொகுக்கப்பட்டுள்ளன. அரசு நிறுவப்படும் முறைகள், பரம்பரை முடியாட்சி, சட்டத்தின் அவசியம் பற்றி குறிப்புகள் உள்ளன.
மன்னர்கள் கீர்த்தி பெறும் வழிமுறைகள், முகஸ்துதி செய்வோரை புறக்கணிக்க வேண்டியதன் அவசியம், வெறுப்பு, பகையை தவிர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை வலியுறுத்தும் விதமாக கருத்துகள் உள்ளன. பழங்கால அரசியல் நடைமுறை நுால்.
– மதி