துாது இலக்கியத்தில் புதுமையாக கணினியை துாது விடுவதற்கு உரிய காரணத்தைக் கூறும் நுால்.
நேற்று, இன்று, நாளை எனத் துவங்கி, 40 தலைப்புகளில் அமைந்துள்ளது. இலக்கணம் பிசகாமல் எழுதப் பெற்றுள்ளது. நல்ல செயல்கள் செய்தால் புகழ் தேடி வரும் என்கிறது. எந்த நிலையிலும் உண்மை பேச அறிவுறுத்துகிறது. பக்திப் பாடல்கள் வழியாக கடவுளை கண் முன் நிறுத்துகிறது. திருமாலின் 10 அவதாரங்களை விளக்குகிறது.
கம்பராமாயணத்தில் காதல் பற்றிய பகுதிகளை தொகுத்துத் தருகிறது. மடமை காதலினால் மதியை இழந்தாள் சூர்ப்பனகை என்று கூறுகிறது. கம்பனுக்கு கணினியைத் துாதுவிட்ட காரணத்தை விளக்கிச் சொல்கிறது. யாப்பிலக்கணம் கற்று, பாடல் இயற்ற வழிகாட்டும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்