சிலப்பதிகாரத்தில் உணர்ச்சியும், வேகமும் நிறைந்த பகுதிகளை விவரிக்கும் காவிய நுால்.
கண்ணகிக்கு, சேரன் செங்குட்டுவன் அமைத்த கோட்டம் பற்றி தருகிறது. கோவலன், கண்ணகிக்கு எத்தனை வயதில் திருமணம் நடந்தது என்பதை அறிய வைக்கிறது. மாதவியின் நடன அரங்கேற்றமும், அவரது துாதுவர்கள், கோவலனை எங்கெங்கு சந்தித்தனர் என்பது பற்றியும் விரிவாக உள்ளது.
முற்பிறவியில் செய்த தீவினையே, கோவலன் முடிவுக்கு காரணம் என சொல்கிறது. கண்ணகிக்கு கல் எடுக்க, மன்னன் புறப்பட்டது பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. மாதவி அணிந்திருந்த நகைகளின் பட்டியல் மற்றும் செல்வச் செழிப்பை படம் பிடித்துக் காட்டுகிறது. கண்ணகி கோவில் பற்றிய பூரணத் தகவல்களை தாங்கி நிற்கும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்