உண்மையைப் போற்றி, உலகை வாழ்த்தி, ஒவ்வொரு மனிதருக்கும் உண்டான கடமையை சுட்டிக்காட்டும் கருத்தாழமிக்க கவிதைகளின் தொகுப்பு நுால். விழுவது எழுவதற்காகத்தானே என உணர்ந்தால் போதும் வெற்றி வசமாகும் என்கிறது.
காதலியின் பேரழகை, ‘புருவமே இவ்வளவு அழகெனில் உருவம்’ என்று வினா எழுப்புகிறது. பார்வை என்ற கவிதையில், இல்லத்தரசிகள் படும் பாடு விவரித்து சொல்லப்பட்டுள்ளது. பொய்யோடு பழகிப் பழகி உண்மையின் தன்மை ஒருவருக்கும் தெரியவில்லை என்று உரைக்கிறது. இது உலகம் முழுதும் பொது என்றே எண்ண வைக்கிறது.
பிடல் காஸ்ட்ரோ பற்றிய கவிதையும் உண்டு. அவரை அழிக்க, 638 முறை முயன்றதாக மிக முக்கியமான தகவலும் உள்ளது. அகம் தெளிய வைக்கும், அருந்தமிழ் கவிதைகளின் தொகுப்பு நுால்.
– முகிலன்