மனம் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை; சூழல்களைப் பொறுத்து நிமிடத்திற்கு நிமிடம் மாறும். நம்மையும் ஆட்டுவிக்கும் அல்லது ஆற்றுப்படுத்தும். அது சொல்கிறபடி செல்லும் பாதை சரியா, தவறா என விடை காண உதவும் நுால்.
வாழ்க்கையில் சிக்கலில் உழல்வதற்கும், சிறப்பாக வாழ்வதற்கும் மனமே காரணம். பரபரப்பான உலகில் நிதானம் இழக்காமல் இருக்க, எது தேவை, எது தேவை இல்லை என சிந்தித்து முடிவெடுக்கும் அறிவுத் தேவை. அதற்கு வழிகாட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
எரிச்சல், கோபம், தாழ்வுணர்ச்சி மற்றும் விரக்தி மன அழுத்தத்தின் படிநிலைகள். அவற்றை சரி செய்தால் வாழ்க்கை நல்லதாக அமையும் என சமகாலப் பிரச்னைகளுக்கு தீர்வு கூறும் நுால்.
– ராம்