தி.மு.க., செயல்பாடுகளை அலசும் அரசியல் நுால். தேர்தலை, 1957ல் சந்தித்தது உள்ளிட்ட நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன. தேர்தலுக்காக கொள்கையை பலியிட்டதாகவும் குறிப்பிடுகிறது.
ராஜதந்திரம் காரணமாகத் தான் அது அசைக்க முடியாத சக்தியாக உள்ளதாக கூறுகிறது. பொழுதுபோக்காக, மேடைப் பேச்சு, கச்சேரி நடத்தியதே ஆட்சியில் அமர வைத்ததாக சாடியுள்ளது.
ஆட்சியைப் பிடிக்க உதவிய தேர்தல் அறிக்கைகளும் இடம் பெற்றுள்ளன. பிற்பகுதியில், கருணாநிதியின் அரசியல் சாதனை, தொண்டுகள் கூறப்பட்டுள்ளன. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதாக கூறி, சொந்த மண்ணை சுரண்டியதாக முடிக்கிறது. தி.மு.க., ஊழல்களையும் பட்டியலிடும் நுால்.
– முகில்குமரன்