வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய சாதனையாளர்களை அறிமுகம் செய்யும் தொகுப்பு நுால். ஆன்மிகம், அரசியல், அறிவியல் துறைகளில் உழைத்த பெருமக்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
ஆன்மிக வெளிச்சம் பாய்ச்சிய சுவாமி விவேகானந்தர், சமூக மாற்றத்துக்கு வித்திட்ட ராஜாராம் மோகன்ராய், உலகத்துக்கு வழிகாட்டிய கவுதம புத்தர், மகாவீரர், கவிதைகளால் கனிவை காட்டிய கலீல் ஜிப்ரான், அடிமை விலங்கை தகர்த்த ஆப்ரகாம் லிங்கன் என உலகின் சாதனையாளர்களை காட்டுகிறது.
அவர்களின் குடும்ப பின்னணி, வாழ்க்கை நிகழ்வுகள், சாதனைகளை சுருக்கமாக உரைக்கிறது. முன்னேறத் துடிப்போருக்கு படிப்பினை ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. மொத்தம், 37 தலைப்புகளில் அமைந்துள்ள நுால்.
– ஒளி