பதினெண் கீழ்க்கணக்கு நுால்களை அறிமுகம் செய்யும் வகையிலான புத்தகம். சிறு குறிப்புடன் பாடல்களுக்கு எளிய பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது.
சங்க கால கருத்து, பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில் காணப்படுவதை குறிப்பிடுகிறது. சங்க நுால்களில் ஊனுண்ணல், கள்ளுண்ணல், பரத்தையருடன் கூடி வாழ்தல் போன்ற நிகழ்வுகளை கடிந்து உரைப்பதை எடுத்துக்காட்டுகிறது.
நல்லனவற்றை உணர்ந்து வாழாமல், அறுசுவை உணவை மட்டும் உண்பது ஏற்புடையதல்ல என விளக்கம் தருகிறது. திரிகடுகத்தில் சுக்கு, மிளகு, திப்பிலி உடல் நோயை நீக்குவது போல, கருத்துகள் வாழ்வை செம்மையாக்கும் என்கிறது. பதினெண் கீழ்க்கணக்கு பற்றி அறிய உதவும் நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்