தமிழ் மொழியின் வளர்ச்சியை முன்வைத்து நவீன தொழில்நுட்ப ரீதியாக சிந்தித்து கருத்துகளை வெளிப்படுத்தியுள்ள நுால்.
மொழியை கற்கும் மனப்பான்மையை வளர்ப்பது குறித்த சிந்தனையை வெளிப்படுத்துகிறது. அதற்கான சூழலை அலசி ஆராய்ந்து எடுத்துரைக்கிறது. தமிழ் மொழியை பயன்படுத்துவோரிடம் உள்ள சிக்கல்களை அலசுகிறது.
உரையாடல், எழுத்தில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டி சரி செய்வது குறித்த தெளிவான சிந்தனையை முன்வைக்கிறது. தவறுகள் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. மொழி பயன்பாட்டில் நவீன தொழில் நுட்பங்களின் செயல்பாடு குறித்து பேசுகிறது. மொழி பயிற்சிக்கு எப்படி செயல்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் முன்வைக்கும் நுால்.
– மதி