மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டையொட்டி 100 கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால்.
கருணாநிதியின் ஆட்சித்திறமை, கற்பனை வளம், இலக்கியத் திறன், கவிப்புலமை, கவியரங்கச் சொல்லாட்சி, கதை எழுதும் கலை, திரைத்துறைச் சாதனைகள், பகுத்தறிவுச் சிந்தனையை உள்ளடக்கியதாக உள்ளன.
மரபு, புதுக்கவிதை, பாடல் எழுதுவோர் பங்களித்து உள்ளனர். பெரும்பான்மையும் அரசியல், திரைத்துறை, இலக்கியம், சமூகப் பங்களிப்புகள் சார்ந்தவையாக உள்ளன. வரலாற்றுப் புதினங்கள், சமுதாய எழுச்சிக் கதைகள், திரைப்படச் சாதனைகள், தொலைக்காட்சித் தொடர்கள், இதழ்ப்பணிகளை குறிப்பிட்டு எழுதப்பட்ட கவிதைகளும் உள்ள நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு