நம் நாட்டுக்கே உரிய தாவர செல்வங்களை அடையாளம் காட்டும் நுால். பூரண தகவல்கள் நிறைந்த கலைக்களஞ்சியம் போல் விளங்குகிறது.
இந்திய மண்ணில் வளரும் 20 தாவரங்கள் குறித்த விபரங்கள் இடம்பெற்று உள்ளன. வில்வம், மஞ்சாடி, வாகை, ஏழிலைப்பாலை, மந்தாரை, அத்தி, இருவாட்சி என பலவகை மரங்கள் குறித்தும் உள்ளது.
குறிப்பிட்டுள்ள மரங்களை பிற மாநிலங்களில் அழைக்கும் பெயர், தாவரவியல் அடையாளம், மரத்தின் முக்கியத்துவம், வளரும் இயல்பு என துல்லியமாக உள்ளது. மரத்துடன் தொடர்புள்ள பிற உயிரினங்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. மரத்தின் பண்பு, வரலாற்று பின்னணி, பாரம்பரியமாக உள்ள மருத்துவ பயன்பாடுகளையும் விளக்குகிறது. மரங்கள் குறித்த கலைக்களஞ்சிய நுால்.
– மதி