அவ்வை அருளிய ஆத்திசூடி நீதிநுால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் எளிய நடையில் உரை தரப்பட்டுள்ளது.
ஆங்கில உரையில் வெளிநாட்டு அறிஞர்களின் கருத்துரைகள், விளக்க உரைக்கு தகுந்தாற்போல் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியமான ஆத்திசூடியில் ஒப்புரவு ஒழுகு என்பதற்கு, சான்றோருடன் வேறுபாடு கொள்ளக்கூடாது என்பதை புரியும்படி சொல்லியுள்ளது.
இணையாக வாழும் மனிதர்களுடன் பகை காட்டாமல்உறவுடன் ஒற்றுமையாக நடப்பது பெருமை தரும் என்பதை எடுத்து சொல்கிறது. மலர்களால் சூட்டப்பட்ட பூமாலையாக உள்ளது. ஆங்கில வழியில் கற்போருக்கும் அவ்வைநெறி ஆக்கம் சிறப்பான பலன் தரும்.
– சீத்தலைச் சாத்தன்