புகழ்பெற்ற நடிகரின் வாழ்க்கை வரலாற்றை உள்ளடக்கிய நுால். நிகழ்வுகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
படிப்பில் நாட்டம் காட்டாத விஜயகாந்த் எப்படி திரைத் துறையில் உச்சத்துக்கு சென்றார் என்று விளக்கியிருக்கிறது. சிறுவயதிலே திரைப்பட மோகம் கொண்டது, குடும்ப வியாபாரத்துக்கு வந்தது, முதன்முதலில் வந்த வாய்ப்பு பறிபோனது, மன உறுதி, திரைப்பட அறிமுகம், படிப்படியான முன்னேற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன.
ஜாதி பேதங்களை ஒதுக்கித் தள்ளி நட்புறவு பாராட்டியது, நல்லிணக்கம், உதவியவர்களிடம் காட்டிய நன்றி உணர்வு, திருமண வாழ்க்கை, கட்சி துவங்கி வியக்கத்தக்க வெற்றிகளை பெற்றது, அரசியல் பின்னடைவுகள் என அனைத்தையும் பதிவு செய்துள்ள நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு