பருவ மழை அறிகுறி, அதற்கு துணையாக நிற்கும் கிரக நிலைகள் பற்றிய விபரங்களை தரும் நுால். உலக நாடுகளை குறிப்பிடும் ராசிகள் நிரல்படுத்தப்பட்டுள்ளன.
பஞ்சாங்க நுணுக்கம், மழை ஜோதிட முக்கியத்துவம், கணிக்க வேண்டிய அம்சங்களை விவரித்துள்ளது. சூரியன், சுக்கிரன், புதன் கோள்களுக்கும், மழைக்கும் உள்ள தொடர்பு விளக்கப்பட்டுள்ளது.
ஒன்பது வித மேகங்கள், பரி வேஷத்தால் பருவமழையை நிர்ணயிப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. இயற்கை குறித்து வித்தியாசமான சிந்தனையை தரும் நுால்.
– புலவர் சு.மதியழகன்