அன்றாட உடற்பயிற்சிக்கான வழிகாட்டும் நுால்.
பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டிய நடைமுறைகளை சுட்டிக்காட்டுகிறது. உணவுமுறை, கட்டுப்பாடுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கண்களுக்கு தர வேண்டிய பயிற்சி முறை குறித்து தெளிவாக்குகிறது. அதனால் விளையும் நன்மைகளையும் எடுத்துரைக்கிறது.
கற்க வேண்டிய மூச்சு பயிற்சி விளக்கம் தரப்பட்டுள்ளது. கை, கால்களுக்கு தனித்தனியே செய்ய வேண்டிய பயிற்சிகளும் அவற்றால் கிடைக்கும் நன்மைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியுறுப்புகளுடன் உள்ளுறுப்புகளையும் பாதுகாக்கும் வழிமுறைகளையும் உரைக்கிறது. யோகாசனம், சூரிய நமஸ்காரம் போன்ற பயிற்சிகள் செய்வதால் கிடைக்கும் நன்மைகளையும் எடுத்துரைக்கும் நுால்.
– ராம்