வாழ்வுக்கு தேவையான கருத்துகளை தெரிவிக்கும் நுால். சிறுவர்களுக்கு புரியும் வகையில் எளிய நடையில் உள்ளது.
மற்றவர் சொல்லும் கருத்தை சிந்தித்து உள்வாங்கும் மனிதன் வெற்றி பெறுகிறான். காலி டப்பா ஏற்படுத்தும் சத்தம் பிரயோஜனம் இல்லாதது. மனிதன் கர்வத்தை ஒழிக்க வேண்டும். ஒருவரின் செருப்பு அடுத்தவருக்கு பொருந்தாது. உலகில் எதுவும் நிலையானது இல்லை. இதுபோன்ற கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வெற்றியை தலைக்கு ஏற்றினால் தலைக்கனம் வந்துவிடும். தோல்வியை மனசுக்குள் ஏற்றினால் பயம் தொடரும். மவுனம் தான் உணர்வுக்கு உறுதி தரும் போன்ற நடைமுறை உண்மைகள் தரப்பட்டுள்ளன. அதிகம் கொடுத்து பெறு போன்ற கருத்துக்களும் உள்ளன. மாணவர், பெற்றோர் படிக்க வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்