கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் வாழ்க்கை, செயல்பாடுகளை சுருக்கமாக தரும் நுால். அறிவு உலகின் ஆரம்ப குரலாக இருந்ததை எடுத்துக்காட்டுகிறது.
பண்டை காலத்தில் சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் முக்கிய தத்துவ ஞானிகளாக புகழ் பெற்றிருந்தனர். இன்றும் அவர்கள் கருத்து சிந்தனையில் செல்வாக்கு செலுத்துகிறது. அவற்றில் அரிஸ்டாட்டில் செயல்பாடு பற்றி விளக்கப்பட்டுள்ளது.
மெய்யியலில் அரிஸ்டாட்டிலின் பங்களிப்பு, துவங்கிய பள்ளி விபரங்கள் தனித்தனி தலைப்புகளில் தரப்பட்டு உள்ளன. அறிவியலில் அவர் கருத்து உருவாக்கிய செல்வாக்கு பற்றியும் கூறப்பட்டுள்ளது. இறுதியாக, அரிஸ்டாட்டில் மீதான குற்றச்சாட்டுக்கும் விளக்கம் தருகிறது. ஒரு தத்துவ ஞானியை அறிமுகம் செய்யும் நுால்.
– ஒளி