பாமரர்களின் அவலங்களை எடுத்துரைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஏழை மக்கள் வலி, வேதனைகள், வார்த்தைகளில் வடிக்கப்பட்டுள்ளது.
முதல் கதை, கோவை மண்ணுக்கே உரிய மொழிநடையில் இரண்டு பாட்டிகளின் பேச்சு வழியாக நகர்த்தப்பட்டுள்ளது. கடைசி கதை, ரேஷன் கடைக்கு ‘மினிஸ்டர் விசிட்’ செய்வதை பற்றி எழுதப்பட்டுள்ளது. மந்திரியை வர்ணிக்கும் போதே கதை களைகட்டி விடுகிறது. வழக்கம்போல் ஏமாறுவது பொதுமக்கள் தான்.
கிடைத்த வேலையில் இருக்கும் கூலித் தொழிலாளி, கைலி கட்டி போனதால் படுகிற அவமானம் சம்பவம் அற்புத நடை அழகுடன் வர்ணிக்கப்பட்டுள்ளது. முதல் வாடிக்கை என்ற கதை சிறப்பு. முடி திருத்துவது பற்றிய வர்ணனை பிரமாதம். புத்தகத்தை படித்த பின் வேறு உலகத்தில் பயணிப்பது போல் தோன்றும்.
– சீத்தலைச் சாத்தன்