பரமாத்மாவை அடையும் வழிகளாக, 18,௦௦௦ சுலோகங்களை உள்ளடக்கிய நுால். பாகவதம் தோன்றிய பின்னணியை விளக்கி, தர்ம நெறிகள் மனதை துாய்மை செய்வதாகக் கூறுகிறது.
முதல் இரண்டு ஸ்கந்தங்கள் இறை தத்துவத்தைக் கூறுவதாகவும், அடுத்த எட்டும் அவதாரங்களை கூறுவதாகவும், பிந்தையவை கிருஷ்ணரின் கதையைக் கூறுவதாகவும் அமைந்துள்ளன. கதைகள், உபகதைகள் என பின்னி பிணைந்துள்ளது.
பகவான் யார், ஆன்மிகச் சாதனை செய்வதெப்படி, சாதனை செய்தவர்களின் மேன்மை என விரிவாக முன்வைக்கிறது. ஒழுக்கத்தோடு கூடிய உண்மை ஞானத்தைப் பெறும் தகுதிகளை முன் வைக்கிறது. தீவினைப் பயன்களை நீக்க ஞான மார்க்கத்தைப் போதிக்கிறது. கிருஷ்ணரின் கதையும் விரிவாகத் தரப்பட்டுள்ளது.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு