வடசென்னை மகத்துவத்தை கூறும் நுால். அனுபவம் வாயிலாக பெற்ற தகவல்களை கோர்வையாக்கி படைக்கப்பட்டுள்ளது.
வறுமை, குற்ற செயல்பாடு, வளர்ச்சியின்மை போன்ற எதிர்மறைகளுக்கு அப்பால், மனிதர்களின் இயல்பான குணம், உழைப்பால் உயர்ந்து நிற்பதை காட்டுகிறது. உணவு முறை, நட்பின் உயர்வு, சமூக உறவின் பிணைப்பை பற்றி கூறுகிறது. ஒரு நடிகை கடைசி நாளை கவித்துவமாக சொல்கிறது.
வட சென்னையின் கலாசார மாற்றத்தை கூறுகிறது. பொருளாதார ரீதியாக பெண்கள் முன்னேற்றத்தை அறிவியல் பார்வையில் அலசுகிறது. கானா போன்ற இசையில் பொதிந்துள்ள நியாயத்தை எடுத்து கூறுகிறது. ஆங்கிலேயருடன் ஏற்பட்டிருந்த உறவை இயல்பாக காட்டுகிறது. வடசென்னை பகுதியில் வசிப்போர் குரலாக மலர்ந்துள்ள நுால்.
– டி.எஸ்.ராயன்