முத்தான 36 சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
முதல் கதை தந்தைக்கு உதவ மறுத்த மகனுக்கு, ஜோதிடர் சொன்னது எப்படி பலன் தந்தது என்பதை சொல்கிறது. திருடுவதை தொழிலாகக் கொண்டவன் எப்படி திருந்தினான் என்பதை திகிலோடு எடுத்துச் சொல்கிறது, ‘விடியலை நோக்கி’ சிறுகதை. உள் உணர்வு கதையைப் படித்தவுடன், இப்படியும் சில சமயம் நடப்பதுண்டோ என எண்ணத் தோன்றுகிறது. உள்ள உணர்ச்சியை துல்லியமாய் சொல்கிறது.
நம்பிக்கையே வாழ்க்கை என்பதை ‘முதல் படி’ சிறுகதை உணர்த்துகிறது. மன அழுக்கு கொண்டவனுக்கு சாதாரண வண்டிக்காரன் பாடம் புகட்டுவது சாட்டையடி. நிஜ அடிப்படையிலானது என்றே எண்ணத் தோன்றுகிறது. அருமையான சிறுகதைகளை தாங்கி நிற்கும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்