இறையருளை போற்றும் பாடல்களின் தொகுப்பு நுால். பழங்காலத்தில், ‘பிறன்மனை நாடுதல், பெற்றோருக்கு பணிதல்’ என்ற முரண்பட்ட அறங்கள் இருந்துள்ளதை தெரிவிக்கிறது.
ஓங்கார லிங்கத்தின் கதை உரைத்த அத்தியாயத்தில், ‘கூன்பிறை முடித்த சென்னிக் கூத்தன் சிவன் 14 ஜோதிலிங்க சொரூபன்’ என்று போற்றுகிறது. அதிலும் முதன்மை காசிலிங்கத்துக்கு என்று பாடப்பட்டுள்ளது. கற்புக்கு தனி இலக்கணத்தையும், முக்கியத்துவத்தையும் சொல்கிறது.
காசி நகர சிறப்பு பற்றி பேசும் தனி அத்தியாயமும் உள்ளது. இவற்றில், கேதார லிங்கத்தின் கதை உரைத்தது, கிளியின் கதை உரைத்த அத்தியாயங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. புராண கதைகள் விரும்புவோருக்கு மிகவும் பிடித்த புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்