உடல் நலம், புத்தக வாசிப்பு போன்ற தலைப்புகளில் கட்டுரைகளை உடைய நுால். அயல்நாட்டுப் பயண அனுபவங்களையும் கொண்டுள்ளது. கட்டுரை, கவிதை, பயணக்கட்டுரை இணைந்து இருப்பதால் முத்துக் களஞ்சியம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழில் மழையை, 14 சொற்கள் குறிப்பதையும், வேர்க்கடலைக்கும், அண்ணல் காந்திக்கும் உள்ள தொடர்பையும் விளக்கியுள்ளது. பயணக் கட்டுரைகளில் செய்திக்கு பொருத்தமாக படங்கள் இடம்பெற்றுள்ளன.
பயணம் செய்த நாடுகளை எழுத்திலும், படத்திலும் இணைத்துக் காட்சிப்படுத்துகிறது. தொலைதுாரப் பயணங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. எளிய மொழி நடையில் உள்ளது. சுலபமாக படிக்க ஏற்ற வகையிலான நுால்.
– முகிலை ராசபாண்டியன்