எண்ணங்களின் சக்தி தான் வாழ்க்கையை வடிவமைக்கிறது என்பது நெஞ்சில் பதியும் வண்ணம் குட்டி கதைகளாக தெரிவிக்கும் நுால். நாம் தோல்வி அடைவதே இல்லை; முயற்சி தான் தோல்வி அடைகிறது. திரும்பவும் முயற்சிக்கலாம்; வெற்றி பெறலாம்.
இவ்வாறு ஆக்கப்பூர்வ கருத்து கூறப்பட்டுள்ளது. மனதை நாம் வழி நடத்துவது இல்லை. மனம் தான் வழிநடத்துகிறது. உழைக்காமல் முன்னுக்கு வந்தால் நிலைக்க முடியாது. இது தத்துவமல்ல; உண்மை.
நேரத்தை நிர்வகிக்க வேண்டும்; நேரம் நம்மை நிர்வகிக்க விடக்கூடாது. இது மாதிரி கருத்துடைய குட்டிக்கதைகளும், தத்துவங்களும் முன்னேற்றத்தைக் காட்டும் செய்திகளும் உள்ளன. இளைஞர்கள் படித்தால் தன்னம்பிக்கை வரும். இனிமையான புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்