சலவைத் தொழில் செய்யும் வண்ணார் சமூக வரலாற்றை ஆய்வுப்பூர்வமாக வழங்கும் நுால். இந்த சமூகத்தில் முக்கிய பிரமுகர்கள் குறித்த விபரங்களையும் தொகுத்துள்ளது.
சலவைத் தொழில், வண்ணார் இன வாழ்க்கை, தோற்ற புராணக்கதை, உவர் மண், கழுதை, வெள்ளாவியும் குறியிடுதலும் உட்பட, 27 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. மாற்று சமூக மக்களுடன் சடங்குகள் வழியாக இந்த மக்களுக்கு உள்ள தொடர்புகளும் விவரிக்கப்பட்டுள்ளன.
வண்ணார் இன மக்களின் பண்டைய வழிபாடு, பழக்க வழக்கங்கள், பிறப்பு, இறப்பு சடங்குகள் குறித்த விபரங்களும் தொகுத்து தரப்பட்டுள்ளன. இந்த இன மக்களின் மேம்பாட்டுக்கு பங்காற்றியோர் பற்றிய குறிப்புரையும் உள்ள நுால்.
– மதி