பல்வேறு தலைப்புகளில் அமைந்த வெண்பாக்களின் தொகுப்பு நுால். தமிழ் மொழியை உயிருக்கும் மேலாகப் பாவித்து இனிமை பொங்க பாடப்பட்டுள்ளது.
மன்னன் ராஜேந்திர சோழன், பழந்தமிழ் புலவர் அவ்வை, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்றோரை வெண்பாவில் படம் பிடித்து காட்டுகிறது. அறிவை விரிவு செய், உழைப்பது உயர்வு போன்ற பொருள்களிலும் ஆக்கங்கள் உள்ளன. தியாகிகள் வ.உ.சிதம்பரனார், திருப்பூர் குமரன் போன்ற தேசியத் தலைவர்களின் பெருமையும் பாடப்பட்டுள்ளது.
பழந்தமிழ் நுாலான நளவெண்பாவில், 427 பாக்கள் தான் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த புத்தகத்தில் 1,000 வெண்பாக்கள் அலங்கரிக்கின்றன. மனதில் பதியும் வெண்பாக்களின் தொகுப்பு நுால்.
– முகிலை ராசபாண்டியன்