அன்றாடப் பணிகளோடு இறை வழிபாட்டிற்காக தேர்ந்தெடுத்த பாசுரங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.
நல்ல புதல்வரைப் பெற, வீண் பழி நீங்க, இடர்கள் ஒழிய, ஏழ்மை அகல, கல்வியில் நலம் பெற, எடுத்த காரியம் கைகூட, பிரச்னைகளுக்கு தீர்வு காண, குடும்பத்தில் ஒற்றுமை நிலவ, இன்பம் நிறைந்த வாழ்வைப் பெற என, 18 தலைப்புகளில் தொகுத்து தரப்பட்டுள்ளன.
பெரியாழ்வார் திரு மொழியில் எட்டு தலைப்புகளிலும், நம்மாழ்வார் திருவாய்மொழியில் 10 தலைப்புகளிலும் பாசுரங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுக்கான பொருள் விளக்கங்களும் எளிய நடையில் தரப்பட்டுள்ளன. ஆன்மிகத்தில் அரிய கருவூலமாக விளங்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்