அவ்வை அமுத மொழிகளை ஆய்வு நோக்கில் கூர்ந்து படைத்துள்ள நுால். பாடல்களில் சந்தம், கருத்தாழம், காலம், மன்னர்களின் பின்னணி என்று வகைப்படுத்தி சொல்லியுள்ளது. காலத்தால் பல அவ்வைகள் இருந்ததை தெரிவிக்கிறது.
சங்க இலக்கியத்தில் அவ்வை பெயரில் உள்ள பாடல்கள், முதலாம் அவ்வை எழுதியதாக கணிக்கப்பட்டுள்ளன. அதில் வஞ்ச புகழ்ச்சியாய், ‘மன்னா உன்னிடம் படை உள்ளது; ஆனாலும் வீரர்களிடம் பயிற்சி இல்லை’ என மன்னன் பெருமையை பறைசாற்றுவதை கூர்ந்து கருத்தை தெரிவித்து உள்ளது.
நல்வழி, மூதுரை, ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்றவை பிற்கால அவ்வையின் படைப்பு என்கிறது. அவை மாணவர்களுக்கு உகந்த கருத்தாக உள்ளதை காட்டுகிறது. அவ்வையை அறிமுகம் செய்யும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்