திருக்குறள் கருத்துகளை கதையாக புனைந்து தெரிவிக்கும் நுால்.
குறளில் மூன்றாம் அதிகாரம் நீத்தார் பெருமை; அடுத்தது அறன்வலியுறுத்தல். இவை இரண்டிலும், 20 குறள்களின் கருத்துகள் எளிய கதைகளாக விளக்கப்பட்டுள்ளன. முடிவில் முத்தாய்ப்பாக திருக்குறள் மையக்கருத்து நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
நியாயத் தராசு என்பது ஒரு கதை. அதில் ஒழுக்கத்தில் சிறந்த முனிவரின் பெருமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. துறவியர் பெருமையை துணிந்து சொல்கிறது. பாண்டிய மன்னன் ஆட்சியில் நகைப் பெட்டி திருடியதாக ஒரு துறவி மீது பழி சுமத்தி தண்டனை தந்ததை விளக்கி, குறளோடு இணைத்துக் காட்டுகிறது. இது போல், 20 கதைகள் அறிவுக்கு உகந்ததாக உள்ளன. அறம் கூறும் கதை நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்