தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் அமைந்துள்ள நுால். குட்டி கதைகள் படிக்கும் ஆர்வத்தை துாண்டுகிறது.
படுக்கைக்கு போனவுடன் துாங்கி விடுபவன் தான் மகிழ்ச்சிக்கு சொந்தக்காரன். ஆலம்பழம் சிறியதுதான்; அதில் இருக்கும் விதையில் எத்தனை பெரிய மரம் உருவாகிறது. சிந்தனையின் வளமும் அப்படித்தான் என்கிறது.
அழகான அங்கங்களை காட்டிலும், குணத்தால்தான் ஒருவர் எப்பொழுதும் நினைவு படுத்தப்படுகிறார். நினைப்பது நடக்கவில்லை என்று வருந்தக்கூடாது; நடப்பது நன்மைக்கே என்று மீண்டும் முயற்சிக்க வேண்டும். அடுத்தவருக்கு உதவுவதால் ஈட்டும் புகழே உண்மையான சொத்து. இது போல் முத்தான கருத்துகளின் புதையலாக மலர்ந்துள்ள நுால்.
– சீத்தலைச் சாத்தன்