சரளமான நடையில் தொய்வின்றி அமைந்துள்ள 17 கதைகளின் தொகுப்பு நுால்.
உயிருக்கு உயிராய் பழகினாலும், காதல் என்று வந்து விட்டால், அனைத்துமே துச்சம் ஆகிவிடும்; துாய நட்பு கூட புறந்தள்ளப்படும் என்பதை முகத்தில் அறைந்தாற்போல் உரைக்கிறது. திருமணம் கைகூட எப்படியெல்லாம் சிரமப்பட வேண்டி உள்ளது என்பதை நகைச்சுவையாய் விவரிக்கிறது, ‘நயமிகு சுயவிவரக் குறிப்பு’ கதை.
மர்ம நாவலை வாசிப்பது போல் அதிர்ச்சி தந்து, நம்பிக்கை வைப்போருக்கே நலம் என, ‘சொந்த வீடு’ கதை சொல்கிறது. முதுமையும், தனிமையும் எத்தகைய கொடுமை என அறிய தந்து பாடம் புகட்டும் புத்தகம்.
– டாக்டர் கார்முகிலோன்