ரயில் பயணத்தின் பின்னணியை அலசுவது போல் எழுதப்பட்டுள்ள நாவல்.
ரயிலில் பயணம் செய்யும் போது பின்னணியில் இருப்போரின் வலி தெரிவதில்லை. வெளி உலகிற்கு தெரியாத அற்புத மனிதர்களை கதாபாத்திரமாக்கி, நாவலில் உலாவவிட்டு தீவிரத்தை உணர வைக்கிறது.
ரயில் ஊழியர்களை களமாக உடையது. பணியில் மனிதாபிமானம் மிக்கோர் பாத்திரங்களாக இடம் பெற்றுள்ளனர். அவர்கள் செயல் நினைவில் இடம் பெறும் வகையில் உள்ளது. நாவல் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என படிக்கும் போது மனம் எதிர்பார்க்கும். ஆனால், அதைத் தாண்டி வேறுவிதமான புரிதலை தருகிறது. ரயில் இயக்கம் பற்றி மேன்மையான எண்ணத்தை நிரம்பும் நுால்.
– ராம்