குடும்ப உறவுகள் உரசிக் கொள்ளாமல் மேம்பட்டு வாழ வழிகாட்டும் இனிய நுால். அன்பு பாராட்டுவது, தவறான பழக்கத்தை தவிர்ப்பது, வீண் தர்க்க வாதங்களை தவிர்க்கும் வழிமுறைகளை உரைக்கிறது.
குடும்பம் குதுாகலமாய் இயங்க, 50 தலைப்புகளில் அருமையான யோசனைகளை சொல்கிறது. அகந்தையே மோதலுக்கு வழிவகுப்பதால் மாற்ற வேண்டும் என்கிறது. அர்ப்பணிப்புள்ள அன்பும், ஒப்படைப்புள்ள அன்பும் மகிழ்வை தரும் என அறிவுரைக்கிறது.
பிறரை குறை கூறும் தவறை செய்யக் கூடாது. புறங்கூறல், கோள் சொல்லல், உளறுதல், வசை பேசல், பொய் கூறல் போன்றவை தவிர்த்து, குடும்பத்தை போர்க்களமாக்காமல் ஒரே அணியாக நின்று ஆடினால், வாழ்வில் வெல்லலாம் என எடுத்து சொல்லும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்