போட்டியில் வெற்றி பெற்ற படைப்புகளின் தொகுப்பு நுால்.
பாவேந்தர் பாரதிதாசன் மேற்கோளை தலைப்பாக கொண்டு போட்டி நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதையும் பெண்மையின் மேன்மையையும், ஆற்றலையும் போற்றுகின்றன. கணவனை பிரிந்த மகளுக்கு போடப்படும் நிபந்தனைக்கு செவிசாய்க்காமல், பாசத்தை வெளிப்படுத்தும் தந்தையின் அன்பு மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மனதை கட்டுப்படுத்த கற்றுக் கொண்டால் எந்தச் சூழலிலும் வெற்றி பெற முடியும் என்ற படிப்பினையை சொல்லி தருகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக மிளிர்கிறது. கருத்தும், வெளிப்பாடும் தரத்தை வெளிப்படுத்துகிறது. கருத்தாழம் மிக்க கதைகளின் தொகுப்பு நுால்.
– ஊஞ்சல் பிரபு