இந்திய பிரதமராக இருந்த நேருவின் வாழ்க்கை, சிந்தனைகளை எடுத்துரைக்கும் நுால். புத்தக வாசிப்பின் சிறப்பை முன்மொழிகிறது.
அதிகமாக யாருக்கும் அறிவுரை சொல்ல வேண்டாம்; கடமையைச் செய்தாலே போதும் என்ற, யதார்த்த சிந்தனையை முன்வைக்கிறது. நாட்டுக்காக சிறையில் இருக்க நேரும்போதெல்லாம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார் நேரு. அப்போது படைத்தது தான், ஆயிரம் பக்கங்கள் உடைய உலகச் சரித்திரம் புத்தகம்.
படிப்பதும், எழுதுவதும் நேருவுக்கு பிடித்தமானவை. சோழர் ஆட்சி பற்றி மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளதையும் பதிவு செய்கிறது. உலக அமைதிக்கான நிலவும் எண்ணம் கொண்டு செயல்பட்ட நேரு பற்றிய தகவல்கள் உடைய நுால்.
– முகிலை ராசபாண்டியன்