பக்தி இயக்கத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கிய ராமானுஜர் வாழ்க்கை வரலாற்று நுால். இல்லறம், சமுதாயத்தில் புரட்சிகள் செய்ததை இனிமையாக கூறுகிறது.
பட்டியல் இனத்தவரை திருக்குலத்தார் என பட்டம் சூட்டி, கோவிலுக்குள் அழைத்துச் சென்றது விவரிக்கப்பட்டுள்ளது. மனைவி தஞ்சம்மாளின் ஜாதி ஆசாரங்களைக் கண்டு துறவறம் மேற்கொண்ட நிகழ்வை சித்தரிக்கிறது.
ஸ்ரீரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூர் வரை 18 முறை நடந்த பின்பே, மந்திர உபதேசம் பெற்றதை எடுத்துரைக்கிறது. அதை எல்லாருக்கும் எளிதாக அறிய உபதேசித்ததை பற்றி கூறுகிறது. திருமேனியை ஸ்ரீரங்கத்தில் விட்டு, திருநாடு சென்ற வரலாறு பக்திப்பரவசம். பெருமாளின் அருள் பெற்ற ராமானுஜர் திவ்ய சரித நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்