வான்மீகியின் ராமாயண மூலக்கதையில் இல்லாத, இரணியன் வதையை அழகுடன் காட்டும் நுால்.
கம்பர் தவிர இரணியன் கதையை ராமாயணத்தில் எவரும் சேர்க்கவில்லை. இதன் வழியாக எதைச் சொல்ல வந்தார், இதன் சிறப்புகள் என்ன போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது. சோகம், பயம், வியப்பு, பக்தி ரசங்கள் உள்ளன.
திருமாலின் வலிமையும், கருணையும், பிரகலாதனின் பக்தியும், இரணியனின் ஆணவமும் உணர்த்தப்பட்டுள்ளது. வியாசரின் ஸ்ரீமத் பாகவதத்தில் ஏழாவது அத்யாயத்தில் இரண்யன் வதை பற்றிப் பாடியதும் வழிகாட்டியுள்ளது. ஆழ்வார்கள் தொகுத்த நரசிம்ம அவதாரத்தை விரித்துப் பாடியுள்ளார் கம்பர்.
ஆணவ நாயகர்களாக இரணியன், ராவணனை ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. தேன் சொட்டும் சுவையை எட்டும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்