எளிய மக்களின் வாழ்க்கை முறையை மையமாக கொண்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். அன்றாட சந்திப்புகளில் காணும் நடை, உடை, பாவனை, சிரிப்பு, வெறுப்பு, கொண்டாட்டங்களை அவதானித்து எவ்வித அலங்காரமும் இன்றி படைக்கப்பட்டுள்ளது.
கதாபாத்திரங்களும், பேச்சு வழக்குகளும், சம்பவங்களும் அந்த வட்டாரத்துக்கே அழைத்துச் செல்கிறது. சிதைவுகளிலும் சிதையாமல் இருக்கும் மனிதர்கள் அறிமுகமாக எதிர்படுவதை காணமுடிகிறது. துணிகளைத் தைய்துக் கொடுக்கும் டெய்லர், அவரது கடை, உடை மீது வீசும் வாசத்தை கண் முன் நிறுத்துகிறது.
தொழில் சார்ந்த பரிணாமத்தை முன்வைப்பது மனதில் நிறைகிறது. கிராமங்களில் வாழும் ஏழை, எளியோருடன் பழகும் பரவசத்தைத் தருகின்றன. படிக்கும் ஆர்வத்தை துாண்டும் கதைகளின் தொகுப்பு நுால்.
– ஊஞ்சல் பிரபு