திரைப்படம் தயாரிக்க உகந்த முறையில்உருவாக்கப்பட்டுள்ள நாவல். விறுவிறுப்பான கதையம்சம் உடையது.
கல்லுாரிப் படிப்பை முடித்த பெண், திரைப்பட இயக்குநர் வற்புறுத்தலால், சினிமா நடிகையாகி கொடிகட்டிப் பறக்கிறாள். அவளுக்குத் திருமணம் நடத்த பெற்றோர் முயலும் போது, செல்வாக்கு தடை போடுகிறது. திறமையான வியாபாரி மகன் அவளை சந்தித்து காதலிக்கிறார். அதற்கு, பெரும் தடை ஏற்படுகிறது. இப்படி பரபரப்பாக நகர்கிறது.
நடிப்பு தொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்வதில் உள்ள பிரச்னைகளை எதிர்கொள்வது தான் கதையின் சிறப்பு அம்சம். இடைச் செருகலாக ஓவியனும், அர்ஜன்டினா பெண்ணும் வருவதை முக்கியப்படுத்தி கதையின் முடிவு அமைகிறது. படித்து மகிழத்தக்க அருமையான நாவல்.
– முனைவர் கலியன் சம்பத்து