துப்பறிதலில் நுண்மாண் நுழைபுலத்தை விளக்கும் மர்ம நாவல்களின் தொகுப்பு நுால். எண்ணெய் கிணறுகளின் அதிபரான மாலிக், அவை வற்றியதால் பணக்காரர் போர்வையில் போதை கடத்தல் கும்பலுக்குத் தலைவனாகி அட்டூழியம் செய்வதை வெட்ட வெளிச்சமாக்குகிறது, ‘கெய்ரோவில் தமிழ்வாணன்’ நாவல்.
ஜாவா தீவு கோவிலில் கொள்ளையடித்த விலைமதிப்பற்ற புலி சிலையை ஜெர்மனியில் துப்பறிகிறது, ‘பிராங்க்பர்ட்டில் தமிழ்வாணன்’ கதை. அனைத்தும் மயிர் கூச்செறியும் சம்பவங்களுடன் அடுத்து என்ன நிகழும் என ஆர்வத்தை துாண்டும் வகையில் விறுவிறுப்புடன் அமைந்துள்ளன. இடையிடையே தத்துவங்களைக் கூறி பன்முக திறனை பறைசாற்றும் நுால்.
– மதி