சின்னஞ்சிறு கதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் ஒரு உணர்வை, கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை, நிகழ்வை முன்வைத்து படைக்கப்பட்டுள்ளன.
இதில் கதைகள், ஒரு தபால் அட்டை, 100 வார்த்தைகள், ஒரு பக்கம் என்ற வரையறைக்குள் எழுதப்பட்டுள்ளன. புதிய களங்களில் புது உத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பரிச்சார்த்தமான முயற்சியாகவும் சில எழுதப்பட்டுள்ளன.
தொகுப்பில் சில கதைகள் மிகக் குறுகியதாகவும், குறுங்கதையாகவும், சிறியதாகவும் அமைந்துள்ளன. ‘புதிய பெட்ரோல்’ என்ற தலைப்பில், ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ் செய்தி கருவை தேர்வு செய்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. சொடுக்கு என்ற தலைப்பில், ‘போலீசிடம் மாமூல் கேட்டான் உள்ளே வந்த திருடன்’ கதை மிக சுவாரசியம். வித்தியாசமான முயற்சியாக மலர்ந்துள்ள நுால்.
– ஒளி